சென்னையில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார அறையில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் வேளச்சேரி மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடின் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு பதிலாக வேளச்சேரி மற்றும் ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் மற்றும் திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதால் இதற்கு பதிலாக சென்ட்ரல் மற்றும் திருவள்ளூர் இடையே இரவு 11.50 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும். மேலும் சென்ட்ரல் மற்றும் ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதால் இதற்கு பதிலாக சென்ட்ரல் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.