சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு இன்று விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இது தொடர்பாக தற்போது மாவட்ட ஆட்சியர் உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது இன்று வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று முன்னதாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூர் அதிக மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.