சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு சர்வதேச மற்றும் இந்தியன் கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்டு ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இந்த போட்டிக்கான மொத்த பரிசு தொகை 50 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சென்னையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்தியாவில் உள்ள கிராண்ட் மாஸ்டர்களில் மூன்றில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்