தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி ஜூலை 8-ம் தேதி அதாவது நாளை சிறுசேரி, ஆழ்வார் திருநகர், சென்னை அம்பத்தூர் ஜெ.ஜெ நகர் தொழிற்பேட்டை, முகப்பேர் கிழக்கு, எழும்பூர், நாகல்கேணி, பல்லாவரம், ஆவடி லட்சுமிபுரம், கிண்டி ராம்நகர், வியாசர்பாடி வி‌எஸ் மணி நகர், போரூர் பிடி நகர் மெயின் ரோடு, வால்டாக்ஸ் சாலை, போஸ் சாலை, என்எஸ்சி, மண்ணடி, கொத்தால் சாவடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேலும் இதேபோன்று ஜூலை 9-ம் தேதி அதாவது நாளை மறுநாள் அம்பத்தூர் கள்ளிகுப்பம், திருமுடிவாக்கம், கொட்டிவாக்கம், கோவூர், போரூர், ஆலப்பாக்கம், மதுரவாயில், பல்லாவரம் ஜெயின், புழல், பாண்டேஸ்வரம், கோவில் பதாகை, சோத்து பெரும்பேடு, சிறுனியம், சோழவரம், சீடிஎச் சாலை, எடப்பாளையம், அலமாதி, திருமுல்லைவாயில், கிண்டி சாந்தி நகர், வளசரவாக்கம், கொடுங்கையூர், பாடி மற்றும் கொரட்டூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.