சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியில் தொண்டை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியாக இருக்கும் நிலையில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் இன்று தன் மனைவியுடன் வியாசர்பாடியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்த நிலையில் அவர்களை பார்த்தவுடன் தொண்டை ராஜ் ஓடினார்.

ஆனால் அவர்கள் அவரை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராஜ் மனைவியின் கண்முன்னே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்ட பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.