
சென்னை செங்குன்றம் என்ற பகுதியில் சேதுபதி என்கிறவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் இவர் மறைந்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது.
இந்த தகவலை அறிந்த குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சேதுபதி தனது நண்பர்களுடன் மறைந்திருந்தார். காவல்துறையினர் வந்ததை அறிந்த சேதுபதி பயங்கர ஆயுதங்களுடன் தப்பிக்க முயன்றார். அப்போது காவல்துறையினர் சேதுபதியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சேதுபதியிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.