
விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக் பாஸ் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வெற்றி கோப்பையோடு 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்தவர்தான் முத்துக்குமரன். இவர் சென்னையில் தன்னுடைய நண்பர்களுடன் சாதாரண வீட்டில் வசித்து வந்தார்.
தற்போது குடும்பத்தோடு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்து முத்துக்குமரன் சென்ற நிலையில் ஹோம் டூர் வீடியோவை தன்னுடைய youtube பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். புதிய வீட்டு வீடியோ எடுத்தவர் முத்துக்குமரன் அண்ணன் வீடு வாங்கி இருக்கிறார் என்று கூற உடனே முத்து இதை ஓனர் கேட்டால் நடப்பதே வேறு என்கிறார். மக்களே இது வாடகை வீடு 40 லட்சத்துக்கு எல்லாம் சென்னையில் புது வீடு வாங்குவது என்பது நடக்காத ஒன்று” என்று கூறியுள்ளார்.