
சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் தனலட்சுமி என்பவரது மகன் கவுரிநாத் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பனுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று திடீரென்று மாணவன் மீது பாய்ந்து கடித்து குதறியது.
இதில் சிறுவனுக்கு இடது கை தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியால் அழகு துடித்த மாணவனை அவனுடைய தாயார் தனலட்சுமி அதே பகுதியில் உள்ள சின்ன ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு நாய் கடிக்கு மருந்து இல்லை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சென்னையில் சமீப காலமாகவே நாய் கடி சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது.