
தமிழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சொத்துவரியானது உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று சென்னையில் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சொத்து வரி 6 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சொத்து வரியானது உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் சொத்து வரியானது 6 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு சொத்துவரி ஆனது 50 சதவீத முதல் 150 சதவீதம் வரை உயர்வடைந்த நிலையில் தற்போது மீண்டும் 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பாமக கட்சியின் ராமதாஸ் உள்ளிட்ட கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் சொத்து வரியை மீண்டும் மீண்டும் முயற்சி மக்களை முட்டாளாக நினைக்காதீர்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.