
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிக மழை பொழிவு, விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு போன்ற பல காரணங்களால் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் 30 முதல் 40 ரூபாய் வரை தக்காளி விலை அதிகரித்துள்ளது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. அதைப்போலவே கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.