சென்னை ராயபுரம் பகுதியில் வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இவ்வாறு 28 பேரைக் கடித்தது. இதனால், அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். இந்தநிலையில், நாயின் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து, உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி இருந்தனர்.

அதில் நாய்க்கு ரேபிஸ் வெறிநோய் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடிபட்டவர்களுக்கு 5 தவணையாக வெறிநோய் தடுப்பூசி போட உத்தரவிட்டு, அவர்களுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் பிரத்யோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.