சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் தற்போது ‌6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதாவது அமைந்தகரை பகுதியில் முகமது நவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபியா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் வீட்டில் தஞ்சாவூரில் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டு வேலை செய்து வந்த நிலையில் அந்த சிறுமி தீபாவளி அன்று சரியாக வேலை செய்யவில்லை என கூறி குடும்பத்தினர் அனைவரும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

உடம்பில் சிகரெட் வைத்து சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறுமி தீபாவளியன்று குளியலறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவர்கள் குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமி சடலமாக கிடந்துள்ளார். இதனால் பயந்து போன இருவரும் உறவினர்கள் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில் மறுநாள் காலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த நிலையில் உடம்பில் தீக்காயங்கள் இருந்தது தெரிய வந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்த போது சிறுமியின் தந்தை இறந்து விட்டதால் தாயின் அரவணைப்பில் இருந்த அவர் வீட்டு வேலைக்காக வந்துள்ளார்.

அவர்கள் குளியலறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் துர்நாற்றம் வீசியதால் வீடு முழுவதும் வாசனை திரவியங்களை பூசி உள்ளனர். இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமது நவாஸ், நாசியா, அவருடைய நண்பர் லோகேஷ், அவரின் மனைவி ஜெயசக்தி, சீமா, மகேஸ்வரி உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சிறுமியை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என்பதால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.