தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் புற நகர் ரயில் சேவை மிக குறைவாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் மின்சாரா ரயில்களை பயன்படுத்துவோர்களை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அதிக ரயில்களை இயக்குவது தொடர்பாக பயணிகளிடமிருந்து அதிகளவில் கோரிக்கை மனுக்கள் கிடைத்துள்ளதாகவும் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலக வேலை மற்றும் கூட்டம் நெரிசல் நேரங்களில் புதிதாக 16 மின்சாரங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் வெளியாகும் புதிய கால அட்டவணையில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.