சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை எழும்பூரில் இருந்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி முதல் ஜூலை 14 வரை மற்றும் ஜூலை 18 முதல் 21ஆம் தேதி வரை காலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் அதே நாள் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் அதே நாள் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.