தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு கெங்கேரி-கெஜ்ஜாலா பகுதிகளுக்கு இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதேபோன்று பெங்களூரு காண்டோன்மென்ட் இடையேயும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அவ்வழியாக  செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டாக்டர் எம்ஜிஆர், சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 1, 2,8,9,4 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று மைசூரில் இருந்து சென்னை டாக்டர் எம்ஜிஆர் மற்றும் சென்ட்ரலுக்கு வரும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 2,3,9,10 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இதேபோன்று வேறு சில ரயில் சேவைகளும் பகுதி நேரங்களிலும் முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.