
சென்னையில் இருந்து பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில்ஜூன் 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விஜயவாடா பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவை மாவட்டம் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு செல்லும் விரைவு ரயில் ஜூன் 26 ஆம் தேதி அதாவது இன்று மற்றும் ஜூன் 30-ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது. பின்னர் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பித்தரகுண்டாவுக்கு மாலை4.30 மணிக்கு செல்லும் விரைவு ரயில் ஜூன் 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.