சென்னையை எடுத்து கொண்டால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியானது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக  சொத்துவரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான வரியை செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை நாளாக இருந்தாலும் சரி வரியை செலுத்த ஏதுவாக மாநகராட்சி வருவாய் துறை இன்று செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.