
சென்னை தீவுத்திடலில் கடந்த வருடம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பலவகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றன. இதில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் விதமாக உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் மாபெரும் உணவு திருவிழா நடைபெற உள்ளது.
நடப்பு ஆண்டு அரசு மற்றும் UNHCR & Offerஅமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா நடைபெறும். இந்த உணவு திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக துணை பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.