சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் விரைவு இரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜய ாடா வரை ஜன் சதாப்தி விரைவு ரயில் சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.50 மணிக்கு விஜயவாடா சென்றடையும். மதுரையில் மறு மார்க்கமாக பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதனைப் போலவே விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினமும் காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நெல்லூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லூரில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.