சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே வழித்தடத்தில் ரயில் தண்டவாளர்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகின்றது. அதே சமயம் சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோவைக்கு இரு வழிப்பாதை இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து இயங்கும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் -கூடூர், சென்னை அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் மற்றும் ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் வேகம் தற்போது மணிக்கு 110 கிலோ மீட்டரில் இருந்து 13 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடூர் வழித்தடத்திலும் கோவை மற்றும் பெங்களூரு வழித்தடத்திலும் வரும் ரயில்களின் நேரம் வெகுவாக குறைந்துள்ளது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது பயண நேரம் 45 நிமிடம் வரை குறையுமென்று பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.