
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் நங்கவழி சேலம் கைலாஷ் மகளிர் கல்லூரியில் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 9499055941 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறியலாம் எனவும் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.