சத்தீஸ்கரின் பிஜாபூர் பகுதியை சேர்ந்த பிரபல youtuber முகேஷ் சந்திரகர் என்பவர் புத்தாண்டு அன்று காணாமல் போய் உள்ளார். அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த வியாழக்கிழமை அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது மொபைல் எண்ணை வைத்து கடைசியாக காட்டிய இடத்திற்கு சென்றனர். அங்கு தீவிர சோதனை நடத்தியதில் செப்டிக் டேங்கில் இருந்து முகேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் முகேஷை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகேஷ் NDTV உட்பட பல ஊடக நிறுவனங்களில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.