மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் இளமாறன்(18) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளமாறன் தனது பாட்டி அமுதாவின் வீட்டில் தங்கி இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுக்கான பணம் கட்ட இயலாததால் இளமாறன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளமாறன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த பாட்டி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது பேரன் தூக்கில் சடலமாக தொங்கியதை  கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளமாறனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.