தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாக்ஸரான தனது கணவர் தன்னை அடித்த போது நான்கு மாத குழந்தை வெளிவந்து விட்டதாக கூறினார்.

அதனைக் கண்டு அவர் தன்னை விட்டு ஓடிவிட்டார் என கூறிய ரேஷ்மா, என்ன செய்வது என்று தெரியாமல் தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் அங்கு 9 மாதம் வரை தன்னுடைய குழந்தை இன்குபேட்டரில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதனைப் போல நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததில்லை, அதனை மட்டும் செய்திருந்தேன் என்றால் நான் எங்கேயோ போயிருப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.