தமிழகம் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கண்ணகி நகரில் ரூ.3.8 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட விழுதுகள் சேவை மையத்தை தொடங்கி வைத்தார். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகிறது.

பின்னர் அங்குள்ள அரசு பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து அவர்களுடன் உட்கார்ந்து பேசி விளையாடினார். மேலும் இது தொடர்பான வீடியோவை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.