கோவையில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்கும் விதமாக புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பிரத்தியேக மென்பொருள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் புகார் தாரர்களின் அணுகுமுறை மற்றும் மனுக்கள் மீதான விசாரணை போன்றவற்றை போன்றவற்றை உறுதிப்படுத்தி மேம்படுத்த மாநகர போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு மேம்படுத்தப்பட இருக்கிறது.

காவல் நிலையங்களில் காவலர்கள் புகார் முறையை பதிவு செய்வதற்கு பிரத்தியேக மென்பொருள் பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் புகார்களை நானும் ஆய்வு செய்ய முடியும். அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.