
தமிழக வெற்றிக்கழகம் என்ற- அரசியல் கட்சியினை தொடங்கி நாளையுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி நாளையுடன் ஒரு வருடம் நிறைவறைவதால் தற்போது அந்த கட்சி சார்பில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஒருபுறம் அம்பேத்கர் மற்றும் மற்றொருபுறம் பெரியார் இருக்க நடுவில் நடிகர் விஜய் கையெடுத்து கும்பிடுவது போல் இருக்கிறது. அதோடு மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய NO LOOKING BACK என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனை நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
