இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் பலவிதமான வீடியோக்கள் வியப்பூட்டும் விதமாக அமைகிறது. அந்த வகையில் தற்போது சேலை அணிந்து கொண்டு ஒரு பெண் பைக் ஓட்டிய வீடியோ வெளியாகி பயனர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளைஞர்கள் மட்டும்தான் பெரிய பைக்கை ஓட்ட வேண்டும் என்ற நிலை மாறி தற்போது பெண்களும் பைக் ஓட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் ‌ இளம் பெண் ஒருவர் சிவப்பு நிற ராயல் என்ஃபீல்டு பைக்கை சிவப்பு நிற சேலை அணிந்து கொண்டு ஓட்டுகிறார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் சாலையில் செல்லும் போது ஒரு கையில் பைக்கை  பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் சேலையை அசைத்தவரே ஓட்டுகிறார். அதோடு இரு கைகளையும் விட்டவாரும் பைக் ஓட்டுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.