தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திக்ழ்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் குறித்த கதை என்று ஏற்கனவே இயக்குனர் ரஞ்சித் கூறியிருந்தார். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கலான் படத்தின் டிரைலர் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி நடிகர் விக்ரமின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.