தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. தற்போது இவர்  நடிகர் அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் தற்போது இவர் “பிருந்தா” என்னும் வெப் தொடரில் காவல் அதிகாரியாக நடிக்கிறார். இத்தொடரின் டிரெய்லர் விடியோவை  படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் வெப் தொடரில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். இத்தொடர் தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 2 தேதி சோனி லைவ்  ஓடிடி- யில் வெளியாகும்.