
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் திரிஷா 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை தற்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புக்காக தளபதி 67 படக்குழு காஷ்மீருக்கு விமானத்தில் சென்ற வீடியோவை பட குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தளபதி 67 படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்பட்டதால் தளபதி 67 படத்தின் டைட்டில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் படக்குழு தற்போது டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு லியோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டில் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
And here he comes! 🔥💣#LEO is here to strike unabashedly! ❤️🔥
It truly is #BloodySweet! 💥
➡️ https://t.co/eZWwvFIi8Z#Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @sonymusicindia#Thalapathy67TitleReveal #Thalapathy67 pic.twitter.com/zdTEDiAeWo
— Sony Music South (@SonyMusicSouth) February 3, 2023