கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் செயல்படும் பெரும்பாலான ஹோட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிக்கு பதிலாக பாலித்தீன் தாள்களை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக இட்லி என்பது மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படும் நிலையில் குழந்தைகளுக்கு கூட இட்லியை டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள். இட்லியை துணி போட்டு வேக வைப்பது தான் வழக்கம். ஆனால் அதற்கு மாறாக பாலத்தீன் தாள் போட்டு அதன் மீது மாவை ஊற்றி வேக வைக்கிறார்கள்.

இதனால் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு ஏற்படும் என்பதால் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்கள் குவிய அவர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது சுமார் 251 ஹோட்டல்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். அதில் 51 உணவகங்களை சேர்ந்த இட்லி மாதிரியில்  கேன்சர் வரவழைக்கும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி இனி இட்லியை வேக வைப்பதற்கு பாத்திரத்தில் பாலித்தீன் தாள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.