புனேவின் கர்பா கிங் என்றழைக்கப்படும் 50 வயதான அசோக் மாலி, திங்கட்கிழமை இரவு புனேயின் சக்கனில் நடந்த நவராத்திரி விழா நிகழ்வில் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது அவர் மகனுடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அசோக் மாலி புனேவில் கர்பா நடனத்தில் பிரபலமானவர். நவராத்திரி விழாவுக்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவரது மரணம் நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது, அதில் அவர் நடனமாடிக் கொண்டிருக்கும்போது கீழே விழும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அசோக் மாலி, மகாராஷ்டிராவின் டூலே மாவட்டத்தை சேர்ந்தவர், கடந்த சில ஆண்டுகளாக கர்பா பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்த திடீர் மரணம், கர்பா நடன விரும்பிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.