
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹன்சிகா வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டால் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதைப் பார்த்து அவரின் 4 வயது தங்கை கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து ஹன்சிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தங்கையுடன் விளையாடும் போது எதிர்பாராத விதமாக கழுத்தில் துப்பட்டா இறுக்கியதா அல்லது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.