
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய பின்னால் நண்பர் ஒருவர் சென்ற நிலையில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் செல்போன் வெடித்து சிதறியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.