நாடு முழுவதும் அதிவேக ரயில் சேவையாக முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் கிளம்பியது. இந்த ரயிலின் மேற்கூறையில் இருந்து திடீரென தண்ணீர் ஒழுகியது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளின் காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகளின் சிரமத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் ரயிலில் நீர் ஒழுகும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரயில்வே துறையின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.