
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் இருந்தார். இந்த மாணவியின் தந்தை ஒரு மாற்றுத் திறனாளி. இந்நிலையில் விடுமுறை தினத்தில் மாணவி தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது அங்கு ஜானகிராமன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜானகிராமனுக்கு இடது கண் பார்வை தெரியாது. இவர் சிறுமியை காதலித்தது தாத்தா பாட்டிக்கு தெரிய வரவே அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் மாணவிக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அவரை ஜானகிராமன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இது குறித்த தகவலின் பேரில் வந்தவாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள் குழந்தை திருமணத்தில் தலைமறைவாகியுள்ள 5 பேரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.