
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், நாகார்ஜுன சாகர் இடது கால்வாய் அருகே உள்ள வெமுலப்பள்ளி பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் கால் தவறி கால்வாயில் விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்க முயன்ற பெண், திடீரென கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கால்வாயில் குதித்து, கயிற்றால் அவரை பிடித்து மேலே இழுத்து வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அந்த பெண்ணுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.