
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(38). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீகாந்த்தை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நிஷா என்பவர் பங்கு வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் அது என் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனை நம்பி ஸ்ரீகாந்த் நிஷா கூறிய வங்கி கணக்கு பல்வேறு தவணைகளாக 39 லட்சத்து 66 ஆயிரத்து 654 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். லாபத்தொகையும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த் நிஷாவை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஸ்ரீகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.