கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர்களுடைய மகன் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மகள் அக்ஷயா (19) ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதில் அக்ஷயா அடிக்கடி செல்போனில் மூழ்கி இருந்துள்ளார். இதனால் நிர்மலா அவரை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளிலும் அக்ஷயா நீண்ட நேரமாக செல்போனை பார்த்துள்ளார். இதனை அவருடைய தாய் நிர்மலா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகிய அக்ஷயா வெளியே வராததால் நிர்மலா சென்று பார்த்தார். அப்போது விஷம் குடித்த நிலையில் தன் மகள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷயா பரிதாபமாக இறந்தார். மேலும் பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.