பிருந்தாவனில் ஒரு குரங்கு Samsung S25 Ultra மொபைல் போனை கைப்பற்றியது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் கார்த்திக் ரதோட் என்பவர் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு குரங்கு பால்கனியில் அமர்ந்து ஒரு விலை உயர்ந்த செல்போனை கையில் வைத்திருக்கிறது. அப்போது கீழே நின்று கொண்டிருந்த மூன்று பேர் குரங்கிடமிருந்து அந்த செல்போனை வாங்குவதற்காக ஜூஸ் பாக்கெட்டுகளை பால்கனியை நோக்கி வீசுகின்றனர்.

ஆனால் முதலில் அந்த குரங்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதன் பிறகு சரியான நேரத்தில் ஒரு ஜூஸ் பாக்கெட்டை எடுத்துவிட்டு மொபைல்போனை கீழே வீசி சென்றது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த குரங்குக்கு பரிமாற்ற வர்த்தகம் பற்றிய அறிவு உள்ளது என்ன நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.