
சென்னை ஆவடியில் சத்யநாராயணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவளுக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர்கள் இருக்கிறார்கள். இதில் சத்யநாராயணன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் செல்போன் செயலி மூலம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் அவருடைய செல்போனுக்கு பல்வேறு குறுந்தகவல்கள் வந்ததுடன் மர்ம நபர்கள் சிலர் பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறி மிரட்டியுள்ளனர்.
அதோடு அவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்ற அவருடைய தாயாரை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் சத்தியநாராயணனின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அவர்கள் புகைப்படம் அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த சத்தியநாராயணன் நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்து எடுத்து குடித்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.