
வாட்ஸ் அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா தளங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். சோசியல் மீடியா தளங்கள் பயனாளர்களை கவரும் நோக்கத்தோடு புது புது அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களின் DM-களில் Username-க்கு பதிலாக செல்லப் பெயர் வைக்கும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாம்.
பயனர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவரின் பெயரை மாற்றி சேவ் செய்து கொள்ளலாம். இதனால் ஒருவரின் User name-ல் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த புதிய அம்சம் பயனாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.