வங்கதேசத்தின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜியாவுர் ரஹ்மான் (50)  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வங்கதேச தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ராஜீப்புடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார்.

உடனே டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜியாவுர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார். 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வங்கதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.