தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நிலையில் அதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு நடிகர் விஜய் வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் செல்கிறார். அவர் ரோடு ஷோ நடத்தியவாரே செல்லும் நிலையில் அவருக்கு செல்லும் வழியெல்லாம் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

தளபதி தளபதி உங்களை பார்க்க வேண்டும் என்ற எங்கள் கனவு நனவாகிவிட்டது என்ற ரசிகர்களின் கோஷம் விண்ணை பிளக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் செல்லும் வழியெல்லாம் தற்போது ரசிகர்கள் அடுத்தடுத்து வாகனங்களின் மீது ஏறி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. அதாவது ஒரு ரசிகர் திடீரென வாகனத்தின் மீது ஏறி நடிகர் விஜய்க்கு வணக்கம் வைத்த நிலையில் பின்னர் பாதுகாவலர் அவரை அங்கிருந்து கீழே இறக்கி விட்டார். அதன்பிறகு மூன்று ரசிகர்கள் திடீரென வாகனங்களில் மீது ஏறிவிட்ட நிலையில் அவர்களுக்கு நடிகர் விஜய் துண்டை போட்டுவிட்டார்.

 

தற்போது ஒரு ரசிகர் பின்னால் இருந்தவாறு நடிகர் விஜய்யை தொட்டு கூப்பிட்ட நிலையில் அவர் என்ன என்று கேட்க துண்டை போட்டு விடுமாறு ரசிகர் கேட்கிறார். உடனடியாக அந்த ரசிகருக்கு விஜய் துண்டை அணிவித்துவிட்டார். மேலும் செல்லும் வழியெல்லாம் தொண்டர்களின் அலப்பறையை நடிகர் விஜய் சிரித்துக் கொண்டே பொறுத்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளது.