
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரரான கே.எல். ராகுல், லக்னோ அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை. அதாவது அவரது மனைவி அதியா ஷெட்டிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் தான் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ட்ரெஸ்ஸிங் ரூமில் குழந்தையை கையில் வைத்து தாலாட்டு பாடுவது போன்று நடனமாடி வீடியோ வெளியிட்டு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ கூட சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் அணியின் கூட்டுக் கூட்டு உணவின் போது, வீரர்கள் தங்கள் திறமைகளை காமெடியாக வெளிப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது கேஎல் ராகுல் அணியின் தலைமை பயிற்சியாளரான கெவின் பீட்டர்சன் போன்று நடித்து காண்பித்தார். குறிப்பாக அவருடைய பேட்டிங் ஸ்டைல் போன்று அவர் நடித்து காண்பித்த நிலையில் பேசவும் செய்தார். இதை பார்த்து கெவின் பீட்டர்சன் விழுந்து விழுந்து சிரித்தார். மற்றவர்களும் சிரித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
KL RAHUL at the DC Team Dinner 💙❤️ pic.twitter.com/tmJpQgcAtJ
— Jyotirmay Das (@dasjy0tirmay) March 26, 2025