இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்பும் நிலையில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் பலர் ரயிலில் செல்கிறார்கள். அப்போது ரயிலில் தின்பண்டங்கள், உணவுகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவர் போலி பவர் பேங்க் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சங்கோட் என்ற பயனர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வாலிபர் பவர் பேங்க்கை ஒரு பயணியிடம் விற்பனை செய்ய பேரம் பேசுகிறார்.

அப்போது ஒரு வருடம் கேரண்டி  இருப்பதாகவும் அதற்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாற்றி தருவதாகவும் கூறினார். அதன் விலை ரூ.500 என்று அந்த வாலிபர் கூறிய  நிலையில் பின்னர் ரூ.300-க்கு தருவதாக ஒப்புக்கொண்டார். இதை அந்த பயணி வாங்கிய போது திடீரென பவர் பேங்க் இரண்டாக பிளந்தது. அப்போது அதில் சேறு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி  அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அந்த வாலிபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.