சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்த சேலம் மக்களும் கோட்டை மாரியம்மன் கோவிலில் திரள்வார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6 நாளை முதல் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி பட்ட கோவில், சின்ன கடைவீதி, அக்ரஹாரம், சத்தியம் கார்னர், கன்னிகா பரமேஸ்வரி கோவில், கமலா மருத்துவமனை, அண்ணா நகர், ஹவுசிங் போர்டு மற்றும் திருவள்ளுவர் சிலை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.