சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சிலர் பைக்கில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்த நிலையில் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது பட்டாசுகளை வெடித்ததில் அதன் தீப்பொறி வெடிகுண்டுகள் மீது பட்டதால் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த செல்வராஜ் (29), 11 வயது சிறுவன் தமிழ்ச்செல்வன், மற்றொரு 11 வயது சிறுவன் கார்த்தி மற்றும் மருத்துவமனையில் வெடி விபத்தால் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த லோகேஷ் (20) ஆகியோரின் குடும்பத்தினருக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.