முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் விமர்சனத்திற்கு பங்களாதேஷ் வீரர் ஷகிப் – அல்- ஹசன் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு பேசிய ஷகிப், “சேவாக் யார்? ஒரு வீரர் எப்போதும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்புவதில்லை.

பேட்ஸ்மேன் ஆக இருந்தால் பேட்டிங்கிலும் பவுலராக இருந்தால் பந்து வீச்சு மூலமும் அணியின் வெற்றிக்கு பங்காற்றுவதே வீரரின் வேலையாகும். இதனை தவிர்த்து யாருக்காகவும் எதையும் பதிலாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.